national
ஊருக்குள் புகுந்த யானைகள்… கண்டபடி தாக்கிய மக்கள்… யானை உயிரிழந்த சோகம்…!
மேற்குவங்க மாநிலம் ஜர்கிராம் பகுதியில் குட்டி யானைகளுடன் சுமார் 6 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தது. இதனால் பயந்த மக்கள் யானையை விரட்டியடிக்க முற்பட்டார்கள். அப்போது யானைகள் கோபமடைந்து அங்குள்ள சுற்றுச்சுவறுகளை இடித்து சேதப்படுத்தியது. மேலும் யானைகள் தாக்கியதில் அந்த ஊரில் இருந்த முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
இதையடுத்து யானை கூட்டத்தை விரட்ட ஹுல்லா அணியினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் தீபந்தங்களை யானை மீது எரிந்து விரட்டி அடித்தனர். ஆயுதம் தாக்கியதில் ஒரு பெண் யானை பலத்த காயம் அடைந்தது.
அதனால் சரியாக நடக்க முடியாமல் தவித்தது. கூர்மையான ஆயுதம் மற்றும் தீ பந்தம் தாக்கி யானையின் முதுகெலும்பில் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனில்லாமல் யானை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது.