நாளை இரவு… விளக்கு ஏற்றும் முன்னர் செய்யக்கூடாதது – என்ன தெரியுமா?

நாளை இரவு… விளக்கு ஏற்றும் முன்னர் செய்யக்கூடாதது – என்ன தெரியுமா?

நாளை இரவு மோடி சொன்னது போல விளக்கு ஏற்றும் முன்னர் கைகளை சானிட்டைசர்கள் கொண்டு கழுவாமல் சோப்புகளால் கழுவினால் போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 60,000 ஐ தாண்டியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2900 ஐ தாண்டியுள்ளது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னால் மக்களிடம் பேசிய மோடி ‘சமூக விலகல் காரணமாக நாம் ஒவ்வொருவரும் தனியாக இருந்தாலும் நம்மோடு 130 கோடி இந்தியர்களும் உள்ளனர். நமது ஊரடங்கு முறையை இப்போது உலகமே பின் பற்றுகிறது. ஏப்ரல் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள மின்விளக்குகளை அணைத்து விட்டு அதற்கு பதிலாக டார்ச் லைட், அகல் விளக்குகள், செல்போன் டார்ச் அல்லது மெழுகுவர்த்திகளை ஏற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  இரவு 9 மணிக்கு தொடங்கி 9 நிமிடங்கள் இதை நீட்டித்து நமக்காக உழைக்கும் மருத்துவர்களை நினைத்துப் பார்க்கவேண்டும். . கொரோனா ஏற்படுத்திய இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வருமாறு மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.’ எனக் கூறியுள்ளார். சென்ற முறை மோடி மக்களை சத்தம் எழுப்ப சொன்னபோது மக்கள் சில கோமாளித்தனமான செயல்களை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து நாளை இரவு மக்கள் வீடுகளில் விளக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும் என்ற மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக, யாரும் விளக்கு ஏற்றும் முன்னர் கைகளை சானிட்டைசர்களால் கழுவ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏனென்றால் சானிட்டைசர்களில் 60 சதவீதத்துக்கு மேல் ஆல்கஹால் இருப்பதால் எளிதில் தீப்பற்ற வாய்ப்புகள் உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.