வயநாடு நிலச்சரிவு சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகி இருக்கிறார்கள். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் தப்பி இருக்கிறார்கள். அவர்களை மீட்பு குழுவினர் வீட்டில் நிவாரண முகாம்களில் தங்க வைத்திருக்கிறார்கள்.
அதில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் நிலச்சரிவில் சிக்கி தங்களின் குடும்பத்தினரையும் உறவினர்களையும் இழந்து தவித்து வருகிறார்கள். அவர்கள் உடல்களாவது கிடைத்து விடுமா என்று பலரும் கண்ணீர் வடித்தபடி நிவாரண முகாம்களில் தவித்து வருகிறார்கள்.
பலர் மண்ணோடு புதைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை நேரடியாக பார்த்து அதை மறக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். மேலும் சிலர் தங்களது உறவுகளை தேடி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சிலர் தாங்கள் வளர்க்க செல்ல பிராணிகளையும் தேடி அலைகிறார்கள். அப்படி தேடியதில் பெண் ஒருவரின் செல்ல நாய் ஒரு வாரத்திற்கு பிறகு அவருக்கு கிடைத்துள்ளது.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட பாச போராட்டம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. வயநாடு பகுதியை சேர்ந்த உமா பாலகிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்தினருடன் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டார். நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து அவரது குடும்பத்தினரை சேர்ந்த பலரும் உயிர் தப்பிவிட்டனர்.
ஆனால் அவர் வளர்த்த நாய் மட்டும் ஒரு வாரமாக காணவில்லை. ஒரு வாரத்திற்கு பிறகு உயிர் தப்பிய அந்த நாய் தனது குடும்பத்தினருடன் சேர்ந்தது, உமாவை பார்த்த அந்த நாய் வேகமாக ஓடி வந்தது உமாவின் காலை சுற்றி சுற்றி செல்லமாக குறைத்து அவரை கட்டிப்பிடித்தது நாயின் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து கொஞ்சினார். இந்த பாசப் போராட்ட வீடியோவானதை இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.











