Connect with us

ஒரு வழியாக முடிவுக்கு வந்த போராட்டம்… நாளை வேலைக்கு திரும்பும் மருத்துவர்கள்…!

Latest News

ஒரு வழியாக முடிவுக்கு வந்த போராட்டம்… நாளை வேலைக்கு திரும்பும் மருத்துவர்கள்…!

மேற்குவங்க மாநிலத்தில் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு நாளை வேலைக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஜூனியர் மருத்துவர்கள் தொடர்ந்து பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்த கூட்டத்தில் ஜூனியர் மருத்துவர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.

அப்போது மம்தா பானர்ஜி கொல்கத்தா போலீஸ் கமிஷனரை நீக்குதல் உள்ளிட்ட மூன்று நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து ஜூனியர் மருத்துவர்கள் நடத்திய ஆலோசனைக்கு பிறகு எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் மற்றும் வேலை நிறுத்த பணிகள் தொடரும் என தெரிவித்திருந்தார்கள்.

தற்போது மீண்டும் மாநில அரசுடன் புதிய பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம் என்று தெரிவித்தார்கள். இதற்கிடையே மேற்குவங்க அரசின் அதிகாரிகளுக்கும் ஜூனியர் டாக்டர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது இந்த பேச்சுவார்த்தையில் தோல்வியில் முடிந்தது.

எனவே வேலை நிறுத்தம் வாபஸ் பெறுவதாக நேற்று அறிவித்திருக்கிறார்கள். வரும் 21ஆம் தேதி முதல் அவர்கள் பணிக்கு திரும்புவதாக கூறியிருக்கிறார்கள். எனவே மருத்துவர்கள் 40 நாட்களுக்கு பிறகு நாளை பணிக்கு திரும்ப இருப்பது குறிப்பிடத்தக்கது.

More in Latest News

To Top