national
பெண் மருத்துவர் கொலை வழக்கு… கொல்கத்தா போலீசை டார்டாராக கிழித்தெடுத்த உச்சநீதிமன்றம்…!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்திருக்கின்றது. இந்த சம்பவத்தில் மாநில காவல்துறையின் விசாரணை பல குற்றச்சாட்டுகளை ஏற்படுத்தி இருக்கின்றது. மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அது மட்டும் இல்லாமல் உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து இருக்கின்றது. மேலும் இந்த விவகாரத்தில் இன்று சிபிஐ தரப்பில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை ஐந்தாம் நாளில் தான் துவங்கியிருக்கின்றது .
சிபிஐ விசாரணை துவங்குவதற்கு முன்னதாகவே சம்பவம் நடந்த இடத்தில் எல்லாமே மாற்றப்பட்டு இருந்தது. கொல்கத்தா காவல்துறை சார்பில் பயன்படுத்தப்பட்டு வரும் தினசரி டைரியில் இந்த சம்பவம் தொடர்பாக காலை 10.10 மணிக்கு தான் பதிவிடப்பட்டிருக்கின்றது. அன்று மாலையில் தான் போலீசார் சம்பவ இடத்தையே தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். இது மிக கவலையடைய செய்கின்றது என்று தெரிவித்திருந்தது.
இதை கேட்ட சந்திர சூட் தலைமையிலான அமர்வு இந்த வழக்கில் எப்போது உடற்கு ஆய்வு செய்யப்பட்டது என்று கேள்வி எழுப்பியது. அதற்கு பதில் அளித்த காவல்துறையினர் 6.10 மணி முதல் இரவு 7.10 மணி வரையிலான நேரத்தில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது என்று தெரிவித்திருந்தார் .மேலும் இயற்கைக்கு மாறான உயிரிழப்பு என்பதால் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.
அந்த வகையில் பஞ்சநாமோ எப்போது தயாரிக்கப்பட்டது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த வழக்கில் கொல்கத்தா காவல்துறையினர் சிஆர்பிசி விதிமுறைகள் எதையும் பின்பற்றவில்லை என்று தெரிவித்திருந்தார்கள். மேலும் இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணையில் மற்றொரு நீதிபதியான ஜே பி பர்திவாலா எனது 30 ஆண்டுகால அனுபவத்தில் உங்கள் மாநிலம் பின்பற்றிய இதே போன்ற வழிமுறைகளை நான் பார்த்ததே இல்லை என்று தெரிவித்திருந்தார்.
மேலும் இரவு அரங்கேறிய சம்பவத்திற்கு காவல்துறையினர் 18 மணி நேரம் கழித்து சம்பவ இடத்தை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். காவல்துறையினர் அங்கு வந்து சம்பவ இடத்தை கைப்பற்றும் முன்பே உடற்கூறு ஆய்வு நிறைவு பெற்றது. காவல்துறையினர் அங்கிருந்து மீண்டும் காவல் நிலையம் சென்ற பிறகு நள்ளிரவு 11:30 பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
உடற்கூறாய்வு முடிந்த நிலையில் நள்ளிரவு 11:45 மணிக்கு முதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது .இந்த சம்பவத்தில் ஏதோ குளறுபடி நடந்து இருப்பதை உணர்ந்துதான் வீடியோ பதிவு செய்திருக்கிறார்கள். பெண் டாக்டர் கொலை வழக்கில் முதல் பதிவு செய்த கொல்கத்தா காவல்துறை அதிகாரி அடுத்த கட்ட விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து இருக்கின்றது.