Latest News
செருப்பு அணிந்து வர வேண்டாம் எனக் கூறிய மருத்துவர்… சரமாரியாக தாக்கிய வைரல் வீடியோ…!
அவசர சிகிச்சை பிரிவுக்குள் காலணி அணிந்து வர வேண்டாம் என்று கூறிய மருத்துவரை நோயாளியின் உறவினர்கள் தாக்கிய வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மருத்துவமனையில் எப்போதும் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருவார்கள். சுத்தமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவது வழக்கம்தான். அப்படி அறிவுறுத்திய மருத்துவரை தாக்கிய சம்பவம் தான் தற்போது அரங்கேறி இருக்கின்றது.
குஜராத் மாநிலத்தில் அவசர சிகிச்சை பிரிவுகள் காலணி அணிந்து வராதீர்கள் என்று அறிவுறுத்திய மருத்துவரை நோயாளியின் உறவினர்கள் தாக்கியிருக்கிறார்கள். தலையில் அடிபட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவரை காணவந்தபோது உறவினர்கள் இந்த சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்.
நோயாளியின் உறவினர்கள் மருத்துவர்கள் தாக்கும் காட்சிகள் மருத்துவமனையில் இருக்கும் சிசிடிவியில் பதிவாகி இருக்கின்றது. சிசிடிவி காட்சியின் அடிப்படையில் மருத்துவரை தாக்கிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.