national
வயநாடு நிலச்சரிவு… சூரல்மலை, முண்டகை பகுதிகளுக்கு செல்வதற்கு தடை… கேரளா அரசு அதிரடி…!
கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த மாதம் இறுதியில் பெய்த கனமழை காரணமாக மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டகை, சூரல்மலை, மேம்பாடி, அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்து போனது. அது காற்றாற்று வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
இதில் நூற்றுக்கணக்கான நபர்கள் பலியாகி இருக்கிறார்கள். இந்த கோர சம்பவத்தில் சிக்கி பலியாக உள்ளவர்களின் எண்ணிக்கை 420 கடந்து சென்று இருக்கின்றது. அதே நேரத்தில் 100க்கும் மேற்பட்டவர்களின் கதி என்னை என்பதை தெரியவில்லை. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் என்று பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 1200க்கும் மேற்பட்ட நபர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இறுதிகட்டமாக நிலச்சரிவில் சிக்கி உயிர் தப்பி அவர்களை வைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இருப்பினும் ஏராளமானவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களை சேர்ந்தவர்கள் வரத் தொடங்கி இருக்கிறார்கள்.
கட்டுப்பாடுகளில் சிறிது தளர்வு அமல்படுத்தப்பட்டதால் அவர்களின் வருகை அதிகரித்து இருக்கின்றது. இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சில வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பாதி இடிந்த நிலையில் இருப்பதால் அவை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடும் என்று அபாயம் இருக்கின்றது.
சூரல்மலையில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நிலச்சரிவு பாதித்த பகுதிகளை பார்ப்பதற்கு வருவது பெரும் ஆபத்தானது. முண்டகை மற்றும் சூரல்மலை பகுதிகளுக்கு பார்வையாளர்கள் செல்ல வயநாடு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருக்கின்றது. இந்த பகுதிகளுக்கு செல்லும் பாலத்தின் நுழைவுப் பகுதியில் போலீசார் தடுப்புகளை வைத்து கண்காணித்து வருகிறார்கள்.