national
ஒன்றரை கோடி… அம்மனுக்கு ஜொலி ஜொலிக்கும் வைர கிரீடம், வைர கம்மல்… வைரலாகும் புகைப்படம்..!
ஆந்திர மாநிலத்தில் அமைந்திருக்கும் அனந்த லட்சுமி அம்மன் கோயிலுக்கு ஒரு தம்பதியினர் ஒன்றரை கோடி ரூபாயில் வைர கிரீடம் மற்றும் வைர கம்மல் வழங்கி இருக்கிறார்கள். ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் அன்னவரத்தில் பிரசித்தி பெற்ற சத்யதேவர் அனந்த லட்சுமி அம்மன் கோவில் இருக்கின்றது.
இந்த கோவிலுக்கு தினம் தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த கோவிலில் உள்ள அம்மனுக்கு கச்சபுரத்தை சேர்ந்த சத்திய பிரசாந்த் மற்றும் அவரின் மனைவி சூரியகலா 130 கேரட் வைரம் பதித்த தங்கத்தால் ஆன கிரீடம், வைரக்கம்மல் உள்ளிட்டவற்றை காணிக்கையாக வழங்கியிருக்கிறார்கள்.
இதன் மதிப்பு ஒன்றரை கோடி இருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த வைர கிரீடத்தை சத்யதேவர் பிறந்த நட்சத்திரமான மகர நட்சத்திரத்தில் வருகிற 6-ம் தேதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அணிவிக்கப்பட உள்ளதாக அந்த கோவில் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.