national
அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு… நீதிமன்றம் உத்தரவு…!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக கூறி மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பண மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி இரவு அமலாக்கத்துறை சார்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். கைது செய்து ஜிகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மீது டெல்லி மதுபானக் கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கூறி சிபிஐ வழக்கு பதிவு செய்தது. மேலும் சிறையில் இருந்த கெஜ்ரிவால் ஊழல் வழக்கில் ஜூன் 26 ஆம் தேதி சிபிஐ சார்பாக கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அமலாக்குத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு கோர்ட் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும் சிபிஐ வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் இருந்து வருகின்றார். சிபிஐ வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றோடு நிறைவடைந்த நிலையில் டெல்லி கோர்ட் மூலமாக காணொளி வாயிலாக அவர் ஆச்சரியப்படுத்தப்பட்டார்.
அப்போது இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா அவரின் நீதிமன்ற காவலை வரும் 20-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டிருக்கின்றார். மேலும் மதுபான கொள்கை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த குற்றத்தை வரும் 12ஆம் தேதி பரிசீலிக்க உள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றார்.