Latest News
திகார் சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்த வந்த அரவிந்த் கெஜ்ரிவால்… தொண்டர்கள் மகிழ்ச்சி…!
திகார் சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினில் வெளிவந்த நிலையில் அவரின் தொண்டர்கள் ஸ்வீட் கொடுத்து கொண்டாடி இருக்கிறார்கள்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஆறு மாதங்களாக திகார் சிறையில் இருந்து வருகின்றார். இவர் ஜாமின் கேட்ட போதும் நீதிமன்றம் கொடுக்க மறுத்துவிட்டது. சுப்ரீம் கோர்ட் வலைதளத்தில் செப்டம்பர் 13ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீதான விசாரணைக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது .
அதன்படி இன்று நீதிபதி சூரியகாந்த் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கினார். அதன்படி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஜாமின் உத்தரவைத் தொடர்ந்து டெல்லி திகார் சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் வெளியில் வந்தார். சிறையில் இருந்து வெளியில் வந்த கெஜ்ரிவாலுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினார். கொட்டும் மலையில் சிறையில் இருந்து ஜாமில் வந்த கெஜ்ரிவாலுக்கு பாரத் மாதா கி ஜே என்று கோச்சமிட்டு ஏமாற்றி தொண்டர்கள் அவரை வரவேற்றனர். மேலும் பலரும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். அரியானா சட்டசபை தேர்தலையொட்டி கெஜ்ரிவால் வெளியே வந்ததால் தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.