வழக்கு பதிவதற்கு போலீஸ் தாமதித்தது ஏன்…? பெண் மருத்துவர் கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி…!

வழக்கு பதிவதற்கு போலீஸ் தாமதித்தது ஏன்…? பெண் மருத்துவர் கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி…!

மேற்கு வங்காளம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜிகர் என்ற மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. உயிரிழந்த பெண்ணுக்கு நீதி வேண்டும் என்று பலரும் கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நேற்று வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கானது இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திர சூட், மனோஜ் மிஸ்ரா, பர்திவாலா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் நீதிபதிகள் காவல்துறை மீது பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்ட 3 மணி நேரம் கழித்து தான் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்த தாமதத்திற்கு காரணம் என்ன இந்த சம்பவத்தை தற்கொலையாக மாற்ற கல்லூரி முதல்வர் முயன்றி இருக்கின்றார். தற்கொலை நாடகமாட ஏற்பாடு செய்து ஜோடித்திருக்கின்றார். இது கண்டனத்திற்குரியது, டாக்டரின் உடலை பார்க்க அவரது பெற்றோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? கல்லூரி என்ன செய்து கொண்டிருந்தார்.

முதல் தகவல் அறிக்கையில் கல்லூரி முதல்வரின் பெயர் இடம் பெறாதது ஏன்? ஆயிரக்கணக்கான கும்பல் திடீரென்று நுழைந்தது ஏன்? போலீஸ் என்ன செய்து கொண்டிருந்தது போலீசுக்கு தெரியாமல் 7000 பேர் கொண்ட கும்பல் மருத்துவமனைக்குள் எப்படி நுழைய முடியும்?  டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மேற்கு வங்காள அரசு தவறிவிட்டது. உன் டாக்டரின் பெயர் ஊடகங்கள் முழுவதும் வெளியிட்டபடுவது கவலை அளிக்கின்றது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வெளியிடுவதை சட்டம் தடை செய்கின்றது. உயிரிழந்த மருத்துவருக்கு இப்படி தான் கௌரவம் வழங்குகின்றோமா? பெண்ணின் அடையாளம் வெளியே தெரிந்தது எப்படி? பெண் டாக்டர் வழக்கில் குற்றவாளிகள் மீது உடனடியாக வேடிக்கை எடுக்க வேண்டும். இந்த நாடு மற்றொரு கற்பழிப்பு சம்பவத்திற்காக காத்திருக்க முடியாது.

இந்த வழக்கில் விசாரணை நிலையை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். வரும் 22 ஆம் தேதிக்குள் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேற்கு வங்காள அரசும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள். மேலும் பெண் மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய 10 பேர் கொண்ட குழுவை உருவாக்குவதற்கும் உத்தரவிட்டிருக்கிறார்கள்.