Connect with us

தோண்ட தோண்ட கிடைக்கும் சடலங்கள்… 316-ஐ கடந்த உயிரிழப்பு… 4-வது நாளாக தொடரும் மீட்பு பணி…!

national

தோண்ட தோண்ட கிடைக்கும் சடலங்கள்… 316-ஐ கடந்த உயிரிழப்பு… 4-வது நாளாக தொடரும் மீட்பு பணி…!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 316 ஆக அதிகரித்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளிரவு வேலையில் அனைவரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில் பல நூறு குடும்பங்கள் மண்ணில் புதைந்தனர்.

வீடுகள் இடிந்து, மரங்கள் வேரோடு சாய்ந்து ஒரு கிராமமே மண்ணுக்குள் புதைந்து விட்டது. தொடர் கனமழை போன்ற காரணங்களால் மீட்பு பணிகள் இன்னும் முடிவுக்கு வராத சூழலில், இன்று 4-வது நாளாக மீட்பு பணியினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 316 ஐ கடந்துள்ளது.

மேலும் நிலச்சரிவில் புதைந்தவர்களை தேடுவதற்காக தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை வைத்து தேடும் போது சேறு சகுதியில் யாரேனும் சிக்கி இருந்தால் அந்த ஸ்கேனர் காட்டி கொடுக்கும். இதை பயன்படுத்தி நிலச்சரிவில் உயிரிழந்தவர்களை கண்டுபிடிக்க முடியும்.

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் சிதைந்து இருப்பது மட்டுமல்லாமல் மண்ணோடு மண்ணாக பலர் புதைந்து உயிரை கொடுத்திருக்கிறார்கள். உறக்கத்தில் பலர் உயிரை விட்டது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த இயற்கை அசம்பாவிதத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

More in national

To Top