Latest News
தலைகுப்புற கவிழ்ந்த ஆட்டோ…. தாயைக் காப்பாற்ற ஆட்டோவை தூக்கிய மாணவி… வைரல் வீடியோ…!
ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் அதன் அடியில் சிக்கிக் கொண்ட தனது தாயைக் காப்பாற்ற பள்ளி மாணவி ஆட்டோவை தூக்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கர்நாடக மாநிலம் மங்களூரு கினிகோலியில் ஆட்டோ ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் சிக்கிக்கொண்டிருந்த தனது தாயை காப்பாற்ற ஆட்டோவை தூக்கி நிறுத்திய பள்ளி மாணவியின் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ராஜரத்தினபுரத்தை சேர்ந்த சேதனா என்பவர் தனது மகளை டியூஷன் சென்டரில் இருந்து அழைத்து வருவதற்காக சாலையை கடந்து கொண்டிருந்தார்.
சாலையை கடக்க வரும் அந்தப் பெண் மீது ஆட்டோ மோதாமல் இருப்பதற்காக டிரைவர் ஆட்டோவை முடிந்தவரை வளைத்து இடது புறம் திருப்பினார். ஆனாலும் தவிர்க்க முடியாமல் ஆட்டோ அந்த இடத்தில் பைக் மீது அமர்ந்து கொண்டு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தவரின் வண்டியில் மோதியது.
பின்னர் அந்தப் பெண் மீது மோதி அவரும் மீது ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தை கண்ட பள்ளி மாணவி உடனடியாக வேகமாக ஓடி வந்து துரிதமாக செயல்பட்டு முழு தைரியத்துடன் தன் பலத்தை வெளிப்படுத்தி அந்த ஆட்டோவை தூக்கி தன் தாயை காப்பாற்றுகிறார். அந்த சிறுமியின் செயலைக் கண்ட அப்பகுதியில் உள்ளவர்கள் அந்த வழியாக சென்றவர்கள் பெண்ணுக்கு உதவுவதற்காக விரைந்து வந்தனர்.
ஓட்டுனர் மற்றும் அருகில் இருந்த சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகி இருந்தது. விபத்தில் சிக்கிய தாயை பள்ளி மாணவி காப்பாற்றும் வீடியோ சமூக வலைதள பக்கங்களில் தற்போது வைரலாகி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.