national
குழந்தைகளுடன் உயிரை விட்ட பெண்… கள்ளக்காதலனுக்கு சிகிச்சை… இது கொலையா? தற்கொலையா?..
ஆந்திர மாநிலத்தில் சிலிண்டர் வெடித்து தாய் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஆந்திரா மாநிலம் அன்னமய்யா என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் திடீரென்று சிலிண்டர் வெடித்தது. இதில் தாய் மற்றும் இறந்த குழந்தைகள் உயிரிழந்தன. இந்த விவகாரம் கொலையா அல்லது தற்கொலையா என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சமையலறையில் இருக்க வேண்டிய சிலிண்டர் எப்படி படுக்கையறைக்கு வந்தது என்பது குறித்து போலீஸ்சார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்து வருகிறார்கள். மேலும் உயிரிழந்த ரமாதேவி என்பவரின் கணவர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் ரமாதேவி ஏற்கனவே வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்திருக்கின்றார்.
ரமாதேவியின் கள்ளக்காதலனும் தற்போது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பல கோணங்களில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.