- Homepage
- Latest News
- மணிப்பூரில் தொடரும் கலவரம்… 5 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு…!
மணிப்பூரில் தொடரும் கலவரம்… 5 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு…!
மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பைன்ரேஞ்சிங் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வருகின்றது. அங்கு கடந்த ஆண்டு மே மாதம் குகி, மெய்தி என்ற இரண்டு இன மக்களிடையே கலவரம் வெடித்தது. 200க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த கலவரத்தில் பலியாகி இருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். மணிப்பூரில் இயல்புநிலை தற்போது தான் படிப்படியாக திரும்பி வருகின்றது. இந்நிலையில் மீண்டும் அங்கு வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றது. ட்ரோன்கள், சிறிய விமானங்கள், வெடிமருந்துகள் நிரப்பிய ராக்கெட் உள்ளிட்டவற்றால் ஆயுதம் ஏந்திய குழுக்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த 7-ம் தேதி நடந்த வன்முறை சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயம் அடைந்தன. இதனால் மணிப்பூரில் அமைதி நிலையை நிலை நாட்ட கோரியும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் கவர்னர் மாளிகை, தலைமை செயலகம் முன்பு மணிப்பூர் மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் தொடர்ந்து அங்கு போராட்டம் நடைபெற்று வருகின்றது. மணிப்பூரில் அமைதியை நிலை நாட்ட வேண்டும் என்று கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்களின் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. மருத்துவம், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளுக்கு மட்டும் ஊரடங்கிலிருந்து விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.