தெருவில் வைத்து பெற்றோரை செருப்பால் அடித்த மகன்… கொடூர சம்பவம்… வைரலாகும் வீடியோ…!

தெருவில் வைத்து பெற்றோரை செருப்பால் அடித்த மகன்… கொடூர சம்பவம்… வைரலாகும் வீடியோ…!

ஜம்மு காஷ்மீரில் மகன் ஒருவன் தனது பெற்றோரை நடுரோட்டில் வைத்து செருப்பால் அடித்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீ நகரில் பொதுவெளியில் தனது தாய் தந்தையை மகன் ஒருவன் செருப்பால் அடிக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளாக பக்கங்களில் வைரலாகி வருகின்றது. பொதுவெளியில் பெற்றோரை தாக்கிய மகன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து புகாரின் பெயரில் அவரது மகன் முஹம்மது அஷ்ரப் வானி மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

அந்த புகாரியில் கடந்த ஒரு வருடமாக தனது வீட்டிற்குள் விடாமல் வெளியே துரத்தி கொடுமைப்படுத்தியதாக அவரது மகன் மீது ராஜா குற்றம் சாட்டியிருக்கின்றார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க அவர் தனது தாய் தந்தையரை செருப்பால் அடிக்கும் வீடியோவானது இணையத்தில் படுவேகமாக பரவி வருகின்றது.