Latest News
பலாத்காரம் செய்த சிறுமியை பழிவாங்க… ஜாமினில் வந்து சுட்டுக் கொன்ற குற்றவாளி… கொடூர சம்பவம்…!
பாலியல் பலாத்காரம் செய்த சிறுமியை ஜாமினில் வந்த குற்றவாளி சுட்டுக்கொன்ற சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
உத்திர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் வசித்து வருபவர் ரிங்கு. இந்த நபர் அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றார். இதற்காக அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமின் வாங்கிக் கொண்டு வந்த ரிங்கு சிறையில் இருந்து வெளியே வந்ததும் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி இரவு பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியை தாய் மற்றும் சகோதரருடன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது வழிமறித்து சிறுமியை துப்பாக்கியால் சுட்டு தள்ளியுள்ளான்.
தனது தாய் மற்றும் சகோதரனின் கண் முன்னே சிறுமியை கொன்று இருக்கின்றான். ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை தாய் மற்றும் சகோதரர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அவர் உயிரிழந்தார். இதையடுத்து தலைமுறைவாகிய ரிங்குவை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.