Latest News
வயதான தாயை தூக்கி சென்று பாலியல் பலாத்காரம்… மகன் செய்த கேவலமான செயல்… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!
வயதான தாயை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்த மகனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியிருக்கின்றது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் தாயை 48 வயதான மகன் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகி இருக்கின்றது. உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் கடந்த 2023 ஜனவரி 16 அன்று பலாத்கார சம்பவம் அரங்கேறி இருந்தது. இது மாநிலத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
அதாவது 48 வயது நபர் ஒருவர் தனது மனைவி இறந்த பிறகு தனது தாயை மனைவியாக இருக்க சொல்லி வற்புறுத்தி வந்திருக்கின்றார். சம்பவ தினத்தன்று தனது வயதான தாயை தோட்டத்திற்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். மேலும் தப்பி ஓடி அவரை உடன்பிறந்த சகோதரர்கள் தேடிப் பிடிக்க காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பாதிக்கப்பட்ட தாய் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். இந்த வழக்கு தொடர்பாக நேற்றைய தினம் இறுதி விசாரணை நடைபெற்றது. அதில் குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 51,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கின்றது. இந்த தீர்ப்புக்கு பலரும் வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள்.