Latest News
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கார்… 2 மணி நேரம் மேற்கூறையில் தவித்த தம்பதி… வைரலாகும் வீடியோ..!
குஜராத் மாநிலத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட காரின் மேற்கூறையில் இரண்டு மணி நேரம் சிக்கி தவித்த தம்பதியை தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் சபர்கான்ந்தா மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாளத்தை கடக்க முயன்ற போது கார் அடித்த சொல்லப்பட்டதால் ஒரு தம்பதி கிட்டத்தட்ட நீரில் மூழ்கிய கார் மீது இரண்டு மணி நேரம் ஆபத்தான நிலையில் இருந்திருக்கிறார்கள். இடார் நகரில் கனமழை காரணமாக வெள்ளை நீரோட்டம் அதிக அளவில் இருக்கின்றது.
இதனால் தீயணைப்புத் துறையினர் நீர்மட்டம் குறைந்த பின்னர் தம்பதியை மீட்டனர். கரூர் ஆற்றின் தரைப்பாளத்தை கடக்க முயன்ற போது சுமார் 1.5 தூரம் தள்ளி காரின் மேற்பகுதி மட்டும் தெரியும்படி கார் தண்ணீருக்குள் மூழ்கியது. உடனே அந்த தம்பதிகள் காரில் இருந்து இறங்கி மேற்கூறையின் மீது ஏறிவிட்டனர்.
அவர்கள் அதிகாரிகளால் மீட்கப்படும் வரை சுமார் இரண்டு மணி நேரம் அங்கேயே அமர்ந்திருந்தார்கள். பின்னர் தீயணைப்பு துறையினர்கள் நீர்மட்டம் குறையும் வரை காத்திருந்து பின்னர் அவர்களை மீட்டார்கள். தனக்கு முன்னாள் ஒரு வாகனம் வெற்றிகரமாக மறுபுறம் கடப்பதை பார்த்த அந்த நபர் அதை கடப்பது என்பது பாதுகாப்பானது என்ற நம்பிக்கையில் வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாளத்தில் கடக்க முயன்ற போது இதுபோன்ற சம்பவம் நடந்ததாக சுரேஷ் மிஸ்திரி கூறி இருக்கின்றார்.