national
என்னம்மா இப்படி பண்றீங்களே… கள்ளக்காதலன் பேசாததால் பெண் எடுத்த விபரீத முடிவு…!
ஆந்திர மாநிலத்தில், கள்ளக்காதலன் பேசாததால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. சித்தூர் மாவட்டம் விஜயா புரத்தை சேர்ந்தவர் ஷெரிப். இவரது மகள் தில்ஷாத் இவருக்கு 30 வயது ஆகின்றது. கடந்த சில நாட்களாக கணவனை விட்டுப் பிரிந்து தனியாக தந்தையுடன் வசித்து வருகின்றார்.
விஜயாபுரம் மண்டலம் வீராபுரத்தை சேர்ந்த டிரைவரான அசோக் என்பவருக்கும் தில்சாத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கின்றது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருக்கின்றது. இதனால் இருவரும் தனிமையில் சந்தித்து தங்களின் கள்ளக்காதலை தொடர்ந்து வந்திருக்கிறார்கள்.
இரண்டு பேரும் மூன்று மாதங்களுக்கு முன்பு திருப்பதி மாவட்டம் பிச்சாட்டூர் பஜார் தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒன்றாக வசித்து வந்திருக்கிறார்கள். அசோக் கடந்த மூன்று நாட்களாக தில்ஷாத்திடம் பேசாமல் இருந்து வந்திருக்கின்றார். மேலும் தில்ஷாத் பலமுறை அவரை போனில் அழைத்த போது அவர் பதில் அளிக்கவில்லை.
இதனால் மனமுடைந்த தில்ஷாத் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தில்சாத்தின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.