Corona (Covid-19)
கொரோனா வைரஸ் – இந்தியாவில் முதல் பலியா ? அதிர்ச்சியளிக்கும் தகவல் !
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் முதன் முதலாக ஒருவர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் 40 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகின்றன.
தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி செய்தியாக ஈரான் நாட்டிலிருந்து லடாக் திரும்பிய 76 வயது இந்தியர் ஒருவர் கொரோனா வைரஸால் இறந்துள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் அவர் கொரோனா வைரஸால் இறந்ததாக இன்னும் அரசு உறுதிப்படுத்தப்படவில்லை.
இதுபற்றி அப்பகுதி மக்கள் பீதியில் உள்ள நிலையில் அவரது மரணம் பற்றி பல்வேறு கருத்துகள் உலவுகின்றன. ஒருவேளை அவர் கொரோனாவால் உயிரிழந்தார் என நிரூபிக்கப்பட்டால் அதுதான் இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் பலியாக இருக்கும்.