Latest News
பணத்துடன் பிடிபட்ட கண்டெய்னர் லாரி… வட இந்திய கொள்ளையன் சுட்டுக்கொலை… அதிர்ச்சி சம்பவம்…!
ஏடிஎம்மில் கொள்ளை அடித்துக் கொண்டு கண்டெய்னர் லாரியில் தப்பிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் மடக்கிப் பிடித்து இருக்கிறார்கள்.
கேரள மாநிலம், திருச்சூரில் கொளழி, சொரனூர் ரோடு பகுதிகளில் பாரத் ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஏடிஎம் மையங்களில் நேற்று இரவு யாரோ பணத்தை கொள்ளை அடித்திருக்கிறார்கள். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் ஏடிஎம் இயந்திரம் சேதப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் விரைந்து வந்து விசாரணை செய்தார்கள். மேலும் வங்கி அதிகாரிகளும் ஏடிஎம் மையங்களுக்கு வந்தனர். ஏடிஎம் இயந்திரங்களில் இருந்த ரூபாய் 65 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. கண்காணிப்பு கேமராக்களில் பெயிண்ட் அடித்து பதிவுகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. இதை தொடர்ந்து போலீசார் அந்த பகுதிகளில் உள்ள மற்ற கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது இன்று அதிகாலை 3 முதல் 4 மணிக்குள் வெள்ளை நிற காரில் முகமூடி அணிந்த நான்கு பேர் வந்து இறங்குவதும், அவர்களது கையில் கேஸ் கட்டர் எடுத்து வந்ததும் தெரிய வந்தது. நான்கு பேர் ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்து அங்கிருந்த கேமராவுக்கு பெயிண்ட் அடிக்கிறார்கள். பின்னர் தாங்கள் கொண்டு வந்த கட்டரை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை வெட்டி பணத்தை எடுத்துச் சென்று இருக்கிறார்கள்.
இதையடுத்து கொள்ளையர்கள் லாரியில் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில் அங்கு சோதனை சாவடியில் நிற்காமல் ஒரு வாகனம் வேகமாக சென்றது. இதையடுத்து போலீசார் அந்த லாரியை துரத்தி பிடித்து கண்டெய்னர் லாரியை கைப்பற்றினர்.
லாரியில் ஆயுதம் உள்ளிட பொருட்கள் இருக்கக்கூடும் என்று சந்தேகம் எழுந்ததால் கண்டைனர் லாரியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வனப்பகுதிக்கு கொண்டு சோதனை செய்தனர். அந்த லாரிக்குள் கட்டு கட்டாக பணம் மற்றும் சொகுசு கார் இருந்தது தெரிய வந்தது. மேலும் லாரியின் ஓட்டுநரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற வட மாநிலத்தினரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.