Connect with us

பலாத்கார மிரட்டல் விடுத்தவரை… அடியாளர்களுடன் அடித்து நொறுக்கிய காங்கிரஸ் பெண் பிரமுகர்… வைரல் வீடியோ…!

Latest News

பலாத்கார மிரட்டல் விடுத்தவரை… அடியாளர்களுடன் அடித்து நொறுக்கிய காங்கிரஸ் பெண் பிரமுகர்… வைரல் வீடியோ…!

உத்தர பிரதேசத்தில் பலாத்கார மிரட்டல் விடுத்தவரை பணியாளர்களுடன் சென்று காங்கிரஸ் பெண் பிரமோகர் அடித்து நொறுக்கிய வீடியோவானது வைரலாகி வருகின்றது.

உத்திரபிரதேச மாநிலம், வாரணாசியில் சமூக வலைதள பக்கத்தில் தனக்கு தொடர்ந்து பலாத்காரம் மிரட்டல் விடுத்த நபரை காங்கிரஸ் உள்ளூர் பெண் பிரமுகர் தனது ஆதரவாளர்களுடன் சென்று அடித்து தாக்கிய சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

வாரணாசியில் பந்தேபூர் பகுதியை சேர்ந்த காங்கிரசை சேர்ந்த இளம் பெண் பிரமுகருக்கு, அதே பகுதியில் வசித்து வரும் சாப்ரோன் ராஜேஷ் சிங் என்ற நடுத்தர வயது நபர் சமூக வலைதள பக்கத்தில் தகாத பதிவுகளை வெளியிட்டு வந்திருக்கிறேன். உங்களை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்குவேன் என மிரட்டி இருக்கின்றார்.

இதனால் கோபமடைந்த அந்த பெண் பிரபுகள் தனது ஆதரவாளர்களுடன் அவரின் வீட்டுக்கு சென்ற மனைவி மற்றும் மகன் முன்னிலையில் பிடித்து அடித்து தாக்கி இருக்கிறார்கள். ராஜேஷின் கைகளை ஆதரவாளர்கள் பிடித்துக் கொள்ள பெண் பிரமுகர் அவரை சரமாரியாக தாக்கும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பின்னர் அவர்களிடமிருந்து தப்பி ஓடிய சாப்ரோன் தனது வீட்டுக்குள் சென்று கதவை பூட்டி கொண்டார். இதையடுத்து போலீசில் புகார் அளிக்க சென்ற பெண் பிரமுகர் ஊடகத்தினரிடம் பேசுகையில் சாப்ரோன் ராஜேஷ் கடந்த 4 வருடங்களாக சமூக வலைதளங்களில் தன்னை பற்றி இதுபோன்ற தகாத முறையில் பேசி மிரட்டி வருகின்றார் என்று தெரிவித்திருக்கின்றார்.

More in Latest News

To Top