வயநாடு சென்றிருக்கும் பிரதமர் மோடி கட்டாயம் அப்பகுதியை தேசிய பேரிடராக அறிவிப்பார் என்று ராகுல் காந்தி தனது twitter பக்கத்தில் தெரிவித்து இருக்கின்றார்.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. வயநாடு, சூரல்மலை, முண்டகை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை ஆகிய பகுதிகளில் கடந்த 30ஆம் தேதி மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 420 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து தீர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரின் தங்கை பிரியங்கா காந்தி முதல் மந்திரி பிணராய் விஜயன், மத்திய மந்திரி சுரேஷ் கோபி உள்ளிட்ட பலரும் மக்களை சந்தித்த ஆறுதல் தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் பிரதமர் மோடி இன்று வயநாடு சென்று இருக்கின்றார்.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக கண்ணூர் விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக பரந்தபடியே பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டார். அதன் பிறகு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களிடம் உரையாடுகின்றார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நிலச்சரிவில் சிக்கி மீட்டவர்கள் தங்கி இருக்கும் முகாமுக்கும், சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கும் பிரதமர் மோடி சென்று ஆறுதல் கூற இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது.
இந்நிலையில் வயநாட்டுக்கு சென்றிருக்கும் பிரதமர் மோடி வயநாட்டு நிலச்சரிவால் ஏற்பட்ட கடுமையான இயற்கை பேரழிவுகளை பார்த்த பிறகு அதை தேசிய பேரிடராக நிச்சியம் அறிவிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்ததாவது “வயநாட்டில் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரடியாக பார்வையிட்ட பிறகு பிரதமர் மோடி ஒரு நல்ல முடிவை எடுப்பார். பேரழிவின் தீவிரத்தை நேரில் பார்வையிட்ட பின்னர் அதை தேசிய பேரிடராக அறிவிப்பார் என்று நம்புகிறேன்” என்று ராகுல் காந்தி பதிவிட்டிருக்கின்றார்.