Connect with us

வயநாடு நிலச்சரிவு… உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 6 லட்சம் நிதியுதவி… கேரள முதல்வர் அறிவிப்பு…!

national

வயநாடு நிலச்சரிவு… உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 6 லட்சம் நிதியுதவி… கேரள முதல்வர் அறிவிப்பு…!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 6 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவித்திருக்கின்றார்.

கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி ஏராளமான வீடுகள் தரைமட்டம் ஆகியது. நள்ளிரவு வேலையில் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் இந்த கோரத்தாண்டவம் அரங்கேறி இருக்கின்றது. உறக்கத்திலேயே பல மக்கள் மண்ணுக்குள் மண்ணாக முதல் புதைந்து உயிரிழந்தனர்.

இதுவரை வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 420 ஐ கடந்திருக்கின்றது. தொடர்ந்து ராணுவம், காவல்துறை, தீயணைப்பு துறை, தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் நிவாரண பணிகளுக்காக திரை பிரபலங்கள் நிதி உதவியை வழங்கி வருகிறார்கள்.

இதற்கிடையே அடையாளம் காணப்படாத 401 உடல்கள் மற்றும் உடல் உறுப்புகளுக்கான டிஎன்ஏ பரிசோதனை நேற்று நிறைவடைந்தது. இந்நிலையில் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 6 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் பினராய் விஜயன் அறிவித்திருக்கின்றார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 வழங்கப்படும் எனவும் தெரிவித்திருக்கின்றார்.

More in national

To Top