கேரள மாநிலத்தில் இந்த வருடம் பண்டிகைக்கு ஒரு வாரம் கொண்டாட்டம் கிடையாது என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்திருக்கின்றார். கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.
இதுவரை 231 உடல்களும், 206 உடல் பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. வீடுகளை இழந்த ஆயிரக்கணக்கானோரை நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வர உள்ள நிலையில் ஒரு வாரம் கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஓணம் வார கொண்டாட்டத்தை மாநில அரசு ரத்து செய்து இருக்கின்றது. இந்த சமயத்தில் வயநாடு மக்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்திருக்கின்றார்.