Connect with us

இனி செக் போட்ட சில மணி நேரத்திலேயே கிளியரன்ஸ் ஆயிடும்… ஆர்பிஐ அறிவிப்பு…!

national

இனி செக் போட்ட சில மணி நேரத்திலேயே கிளியரன்ஸ் ஆயிடும்… ஆர்பிஐ அறிவிப்பு…!

இனி வங்கிகளில் செக் கொடுத்த சில மணி நேரத்திலேயே கிளியரன்ஸ் ஆகிவிடும் என்று ஆர்பிஐ அறிவித்து இருக்கின்றது.

இந்திய ரிசர்வ் வங்கியின் 6 உறுப்பினர்களைக் கொண்ட நாணய கொள்கை குழு ஆர்பிஐ-யின் பணவியல் கொள்கை குறித்து இன்று விவாதித்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு குழுவில் எடுக்கப்பட்ட முடிவை ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்தாஸ் அறிவித்திருந்தார்.

அதன்படி யுபிஐ மூலம் வரி செலுத்துவதற்கான வரம்பை ஒரு லட்சத்திலிருந்து 5 லட்சம் ஆக உயர்த்துவதாகவும், இது யுபிஐ மூலம் வரி செலுத்துவதை எளிதாக்கும் என்றும் சக்தி காந்தாஸ் தெரிவித்திருக்கின்றார்.

மேலும் வங்கிகளில் வழங்கப்படும் காசோலை சில மணி நேரங்களிலேயே கிளியரன்ஸ் செய்யும் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது என்றும் அவர் அறிவித்திருந்தார். தற்போது சிஸ்டம் மூலம் செக் கிளியர் செய்ய இரண்டு வேலை நாட்கள் ஆகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் இந்த புதிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கின்றது.

More in national

To Top