Connect with us

திருப்பதியில் லட்டுவின் புனித தன்மைக்கு களங்கம்… கடும் நடவடிக்கை எடுப்போம்… சந்திரபாபு உறுதி…!

Latest News

திருப்பதியில் லட்டுவின் புனித தன்மைக்கு களங்கம்… கடும் நடவடிக்கை எடுப்போம்… சந்திரபாபு உறுதி…!

ஆந்திராவில் தற்போது சந்திரபாபு தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகின்றது. கடந்த  ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் திருப்பதியில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தியதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார். அதற்கு வாய்ப்பே கிடையாது என்று முன்னாள் தேவஸ்தான அதிகாரிகள் அனைவரும் தெரிவித்து இருந்தார்கள்.

இந்நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாமிச கொழுப்பு, மீன் எண்ணெய், பாமாயில் ஆகியவை கலந்திருப்பது உண்மைதான் என்பதற்கான ஆய்வக ஆதாரத்தை தெலுங்கு தேசம் கட்சியினர் நேற்று மாலை அறிக்கையாக வெளியிட்டது. இது உலகம் முழுவதும் இருக்கும் ஏழுமலையான் பக்தர்களுக்கு மிகப்பெரிய வேதனையை கொடுத்தது.

ஏழுமலையான் கோவிலின் புனித தன்மையை கெடுத்து விட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் விஜயவாடாவில் உள்ள தலைமை செயலகம் அருகே அண்ணா கேண்டினை முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியில் பிரசாதம் தயாரிப்பில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருக்கின்றது.

திருப்பதிய ஏழுமலையான் கோவிலின் புனித தனிமைக்கு கேடு விளைவிப்பதாகவும் கடந்த ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது வரம்பு மீறிய தவறுகளை செய்திருக்கிறார்கள். அவர்களின் பேராசைக்கு ஏழுமலையான் சாமியும் விதிவிலக்கல்ல. எனவே திருப்பதி கோவிலின் புனித தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

More in Latest News

To Top