national
கேரளாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!
கேரளாவில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருந்தது. அங்கு பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அது மட்டும் இல்லாமல் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கேரளாவில் இன்றும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மல்லபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.