மீண்டும் பெட்ரோல் மீதான வரியை உயர்த்திய மத்திய அரசு – அதுவும் இவ்வளவா ?

மீண்டும் பெட்ரோல் மீதான வரியை உயர்த்திய மத்திய அரசு – அதுவும் இவ்வளவா ?

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை 8 ரூபாய் வரை உயர்த்திக்கொள்ள அனுமதி கேட்ட மசோதாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரொனா வைரஸ் பீதி இப்போது உலகம் முழுவதும் உள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை 15000 க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.இதனால் உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை உருவாகியுள்ளது. இதன் மூலம் கச்சா எண்ணெய்யின் கிட்டதட்ட பாதியாகக் குறைந்துள்ளது. ஆனால் இந்தியாவின் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையவில்லை.

சமீபத்தில்தான் கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் வரை உயர்த்தி மத்திய அரசு மக்களை அதிர்ச்சியடைய வைத்தது.  பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை 8 ரூபாய் வரை உயர்த்திக்கொள்ளும் மசோதா ஒன்று நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதன் படி எதிர்காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை 8 ரூபாய் வரை உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே உள்ள வரி உயர்வு வரம்பை சேர்த்து பெட்ரோலுக்கு ரூ 18ம் டீசலுக்கு ரூ 12 ம் அதிகமாகியுள்ளது. இதனால் மீண்டும் பெட்ரோல் விலை அதிகமாகலாம் என சொல்லப்படுகிறது