யாரும் வீட்டு வாடகை வாங்கக் கூடாது; மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு! கேட்பார்களா?

யாரும் வீட்டு வாடகை வாங்கக் கூடாது; மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு! கேட்பார்களா?

கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாடகை வீட்டில் குடியிருப்பவர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் வாடகை வாங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் 1000 ஐ நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இன்றோடு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 6 ஆவது நாளை இந்திய மக்கள் கடக்கின்றனர். இந்நிலையில் இம்மாதம் முடியவுள்ள நிலையில் மாதத் தொடக்கத்தில் வாடகைக் கொடுக்கவேண்டும் என்பதே பலரது பிரச்சனையாக எழுந்துள்ளது.

பலருக்கும் இந்தமாதம் சம்பளம் வருமா வராதா என்பது தெரியவில்லை. அதனால் எப்படி வாடகைக் கட்டுவது என்ற குழப்பத்தில் இருந்தவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி மக்கள் யாரும் வாடகை வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இதனை வீட்டு உரிமையாளர்கள் ஏற்பாளர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.