Latest News
மூத்த குடிமக்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி… மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!
70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் சுகாதார காப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருக்கின்றது.
தேசிய காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் காப்பீடு வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருக்கின்றது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: “ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் 6 கோடி மூத்த குடிமக்களை கொண்ட 4.5 கோடி குடும்பங்கள் பயனடையும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்த ஒப்புதல் உடன் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து மூத்த குடிமக்களுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி திட்டத்தின் பலன்களை பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். இந்த மூத்த குடிமக்களுக்கு ஏபி பிஎம் திட்டத்தின் மூலம் புதிய தனித்துவமான அட்டை வழங்கப்படும் என்று அந்த அறிக்கையை தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த திட்டத்தின் மூலமாக 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு தங்களுக்கு 5 லட்சம் வரை கூடுதல் காப்பீட்டை பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் சுகாதார திட்டம், முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதார திட்டம், ஆயுஷ்மான் மத்திய ஆயுத காவல் படை போன்ற பிற சுகாதார காப்பீடு திட்டங்களின் பலன்களை பெறும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஏற்கனவே இருக்கும் காப்பீடு திட்டம் அல்லது புதிய காப்பீடு திட்டத்தை தேர்வு செய்து பயன்பெறலாம் என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கின்றது.