பெங்களூரு நகரின் தொட்டஹல்லி என்ற பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று இன்டிகேட்டர் போடாமல் இடதுபுறம் திருப்பி இருக்கின்றது. இதனால் பின்னால் வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றார். இதனால் ஆத்திரமடைந்த அவர் கார் ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றார்.

கார் ஓட்டுநர் காரை விட்டு இறங்காததால் கோபமடைந்த இரு சக்கர வாகன ஓட்டி கண்ணாடியை உடைத்து காரில் இருந்த தம்பதிகளிடம் ரகளை செய்திருக்கிறார்கள். இது குறித்து கார் ஓட்டுநர் சமூக வலைதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து பெங்களூரு போலீசார் இருசக்கர வாகன ஓட்டியை கண்டுபிடித்து கைது செய்தார்கள். இரு சக்கர வாகன ஓட்டி ரகளை செய்த சம்பவம் தொடர்பான வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

By ramya