national
புரதச்சத்து நிறைந்த மோருடன் சேர்த்து புழுவும் அனுப்பி இருக்காங்க… ஆதங்கத்தில் வாடிக்கையாளர் வெளியிட்ட வீடியோ..!
அமுல் நிறுவனம் தயாரிக்கும் மோர் பாக்கெட்டில் புழு இருந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
சமீப நாட்களாக ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யும் பொருட்களில் புழு, பூரான், கட்டைவிரல் போன்ற பொருட்கள் இருந்த சம்பவத்தை தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தோம். இந்நிலையில் தற்போது அமுல் நிறுவனம் மோர் கப்பில் புழு நெலியும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.
இதை ஒரு வாடிக்கையாளர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது “அமுல் இணையத்தில் பொருள் வாங்குவதை நிறுத்துங்கள். அமுல் உங்களின் அதிக ஒரு புரத சத்து நிறைந்த மோருடன் சேர்த்து புழுவையும் அனுப்பி வைத்திருக்கிறார்கள். அண்மையில் நான் வாங்கிய மோரில் புழுக்கள் இருப்பதை கண்டு மிக அதிர்ச்சி அடைந்தேன்.
இதை வெளிப்படுத்தவே இந்த வீடியோவை நான் பதிவிட்டிருக்கின்றேன். நான் அமுல் நிறுவனத்திற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். அத்துடன் இது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் இணைத்து அவர்களின் சோதனைக்காக இன்றுக்குள் சேகரிக்கும் படி கேட்டுக் கொண்டிருந்தேன். நான் எந்த பொய்யான குற்றச்சாட்டையும் வைக்கவில்லை” என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக குஜராத்தில் உள்ள அமுல் தலைமை அலுவலகத்தில் இருந்து இவருக்கு அழைப்பு வந்ததாகவும், நடந்த சம்பவத்திற்கு அவர்கள் வருத்தம் தெரிவித்ததாகவும் அவர் தன்னுடைய அடுத்த பதிவில் தெரிவித்து இருந்தார். இருப்பினும் இந்த வீடியோ தற்போது வைரலானதை தொடர்ந்து பலரும் உணவு பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் மக்களுக்கு வழங்கும் உணவை தரமாக வழங்குங்கள் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.