national
இந்தியர்களுடன் ஆற்றில் தலை குப்புற கவிழ்ந்த பஸ்… 14 பேர் பலி… அதிர்ச்சி சம்பவம்…!
இந்தியர்களுடன் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த நிலையில் 14 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. நேபாளத்தின் தனாஹூன் மாவட்டத்தில் 40 பேருடன் இந்திய பயணிகள் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கின்றது.
இந்த பேருந்து பொக்ராவில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்று கொண்டிருந்த போது காலை 11:30 மணியளவில் மார்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்திருக்கிறார்கள்.
UP FT 7623 எண் கொண்ட பஸ் ஆற்றில் விழுந்து ஆற்றின் கரையில் கிடக்கின்றது என்று டிஎஸ்பி தீப்குமார் ராயா உறுதிப்படுத்தினார். இந்த ஆற்றல் கவிழ்ந்த பேருந்தில் பயணித்த 40 இந்தியர்களில் 14 பேர் உயிரிழந்துவிட்டனர். 16 பேர் உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.