Latest News
பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த பேருந்து… 4 பேர் பலி… அதிர்ச்சி சம்பவம்…!
மகாராஷ்டிரா மாநிலத்தில் தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் இது 4 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி அருகே தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. அமராவதியில் இருந்து 50 பேருடன் சென்று கொண்டிருந்த பேருந்து 30 அடி பள்ளத்தில் கவர்ந்து விபத்துக்குள்ளானது. இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் பேருந்தில் இருந்து பயணிகளை மீட்டு வருகிறார்கள்.
வளைவில் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தாக கூறப்படுகின்றது. 40க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்கள். இவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.