national
பட்ஜெட் 2024: எந்த பொருட்களின் விலை கூடும்..? எந்த பொருட்களின் விலை எல்லாம் குறையும்..? முழு தகவல் இதோ..!
2024-25 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. பல பொருள்களின் வரி குறைக்கப்பட்டுள்ளது. சில பொருள்களின் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி எந்த பொருள்களின் விலை குறையும், எவை எல்லாம் கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
செல்போன், செல்போன் சார்ஜர்கள், மொபைல் உதிரி பாகங்கள் போன்றவற்றிற்கான சுங்கவரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் செல்போன் மற்றும் சார்ஜர்களின் விலைகள் குறைய வாய்ப்பு.
தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்கவரி 6 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 15 சதவீதமாக இருந்தது. தற்போது ஆறு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைய வாய்ப்பு இருக்கின்றது.
புற்றுநோய் சிகிச்சைக்கான மூன்றும் மருந்துகளுக்கு முற்றிலுமாக வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை வெகுவாக குறையும்.
இறால், மீன் உணவுகள் உள்ளிட்ட சில கடல் உணவுகளின் மீதான அடிப்படை சுங்கவரி 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கடல் உணவுகளின் விலை குறையும் என்று கூறப்படுகின்றது.
தோல் மற்றும் காலணி தயாரிப்புகளுக்கு சுங்கவரி ரத்து செய்யப்பட்டுள்ளதால் காலணிகளின் விலை குறையும்.
விண்வெளி பாதுகாப்பு துறையில் இன்றியமையாத 25 முக்கியமான கனிமங்களுக்கு சுங்கவரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த கனிமங்களின் சுங்கவரி ரத்து செய்யப்படுகின்றது.
அமோனியம் நைட்ரேட் மீதான சுங்கவரியை 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் அமோனியம் நைட்ரேட் சார்ந்த பொருட்களின் விலை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது.