Connect with us

பேனாவை திருடிய சிறுவன்… சின்ன பையனும் கூட பாக்காம ஆசிரமத்தில் டார்ச்சர் செய்த கொடூரம்…!

national

பேனாவை திருடிய சிறுவன்… சின்ன பையனும் கூட பாக்காம ஆசிரமத்தில் டார்ச்சர் செய்த கொடூரம்…!

ராமகிருஷ்ணா ஆசிரம பள்ளியில் தங்கி பாடம் பயின்று வரும் 3-ம் வகுப்பு மாணவன் ஒருவர் பேனாவை திருடியதற்காக ஆசிரியர்கள் அடித்து சித்திரவதைப்படுத்தப்பட்டது மட்டுமல்லாமல் ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்க வைக்கப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

கர்நாடகா மாநிலம். ராயச்சூரில் இயங்கி வரும் ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் குடும்ப வறுமை காரணமாக 3-ம் வகுப்பு படிக்கும் தருண் என்பவர் அங்கு தங்கி படித்து வருகின்றார். இவரது அண்ணன் அருணும் அங்குதான் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தருண் தனது சக மாணவரிடம் இருந்து பேனாவை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் ஆசிரம பொறுப்பாளர் வேணுகோபால் மற்றும் அவரின் சகாக்கள் சிறுவனின் கைகால்களை கட்டி மூன்று நாட்களாக அறையில் கட்டி வைத்து பெல்ட்டாலும், விறகு கட்டையாலும் அடித்து தாக்கி இருக்கிறார்கள். இது தொடர்பாக சிறுவன் தெரிவித்ததாவது “அவர்கள் தன்னை விறகு கட்டையால் அடித்தனர். அடுத்து கிரிக்கெட் போட்டால் என்னை அடிக்க தொடங்கினார்கள்.

எனது உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.  என்னை யாக்திர் என்ற பகுதியில் உள்ள ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கு பிச்சையெடுக்க வைத்தார்கள். ஆனால் காசு எதுவும் கிடைக்கவில்லை” என்று சிறுவன் கூறியுள்ளான். சிறுவனின் தாய் மகனை பார்க்க பள்ளிக்கு வந்த போது ஐந்தாம் வகுப்பு படித்த மகன் அருண் மூலம் இந்த விஷயத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்கள்.

கண்கள் வீங்கி நிலையில் மகனைப் பார்த்த தாய் நிலை குலைந்து போனார். இதையடுத்து குழந்தைகள் நல செயல்பாட்டாளர் மூலம் சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுத்து வந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

More in national

To Top