national
ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… பயணிகள் அதிர்ச்சி…!
மும்பையில் இருந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த விமானம் இன்று அதிகாலை 5.45 மணிக்கு மும்பையில் இருந்து கிளம்பியது. விமானத்தில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் என்றும் மொத்தம் 135 பேர் பயணம் செய்தார்கள். இந்நிலையில் அந்த விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இந்த தகவலை விமானி திருவனந்தபுரம் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்திருந்தார். திருவனந்தபுரத்தில் விமான நிலையத்தில் இது தொடர்பாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் மும்பை விமான விமானம் தரையிறக்கப்பட்டு அங்கிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
அந்த விமானம் வழக்கமாக காலை 8.10 மணிக்கு தர இயங்கும். வெடிகுண்டு மிரட்டல் வந்த பத்து நிமிடத்திற்கு முன்னதாக 8 மணிக்கு தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டன. பின்னர் விமானத்துக்குள் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
பயணிகளின் இருக்கை, கழிவறை, லக்கேஜை அனைத்து இடங்களிலும் சோதனை செய்யப்பட்டது. பின்னர் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது பொய் என்பது நிரூபணம் ஆகிவிட்டது. இந்த சம்பவம் திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.