---Advertisement---

அடிக்கடி தொடரும் மாரடைப்பு… நேரலையில் பேசிக் கொண்டிருந்த போதே மரணம்… அதிர்ச்சி சம்பவம்…!

Published on: August 20, 2024
---Advertisement---

பெங்களூரு விதானசவுதா அருகே பத்திரிகையாளர் கூட்ட அரங்கம் நடைபெற்று வந்தது. இங்கு முதல் மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர உத்தரவிட்ட கவர்னரை கண்டித்து கர்நாடகா பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் சங்க நிர்வாகியும் சித்தராமையாவின் ஆதரவாளருமான சி கே ரவிச்சந்திரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்து கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் திடீரென்று அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை அங்கிருந்த கன்னிங்காம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பதை கண்டறிந்து சிகிச்சை அளித்தார்கள். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவர் அந்த கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போதே மயங்கி விழுந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதேபோல் தான் யாதகிரி டவுனில் சுபாஷ் சர்கில் நேற்று முன்தினம் காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்ட சித்தராமையாவின் ஆதரவாளரான ராஜ்குமார் கணேஷ் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்திருக்கின்றார்.

அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று மத்திய பிரதேசத்தில் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற நபர் மருத்துவரின் கண் முன்னே மரணம் அடைந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இப்படி இந்தியாவில் மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না