Latest News
நெய்யில் கலப்படம்… 3 நிறுவனங்களுக்கு தடை… வெளியான அதிரடி உத்தரவு…!
நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக கூறி 3 நிறுவனங்களுக்கு கேரளா அரசாங்கம் தடை விதித்து இருக்கின்றது.
இந்தியாவில் மிக பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று ஏழுமலையான் கோவில். இந்த கோயிலுக்கு தினம் தோரும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த கோயிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வந்த லட்டுவில் கடந்த சில வருடங்களாக மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் பன்றி இறைச்சி கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
தரமற்ற நெய்யை வாங்கி அதில் லட்டு தயாரித்து விற்பனை செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தூய நெய் கொண்டு லட்டு தயாரிக்கப்பட்டு வருவதாக சந்திரபாபு தலைமையிலான அரசு தெரிவித்து இருக்கின்றது. இந்த விவகாரம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
இதனால் அனைத்து இடங்களிலும் கோவில்களில் பயன்படுத்தப்படும் நெய்யின் தரத்தை பரிசோதித்து வருகிறார்கள். அந்த வகையில் கேரளாவில் விற்பனை செய்யப்படும் நெய்யில் தரம் இல்லை என்று புகார் வந்த நிலையில் நெய் வகைகளின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில் கேரளாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஜோய்ஸ், மேன்மா, எஸ்ஆர்எஸ் ஆகிய நிறுவனத்தினர் நெய்யுடன் தாவர எண்ணெய், வனஸ்பதி ஆகியவற்றை சேர்த்திருந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த மூன்று வகை நெய் உற்பத்திக்கும் விற்பனைக்கும் தடை விதித்து மாநில உணவு பாதுகாப்புத்துறை ஆணையம் உத்தரவிட்டிருக்கின்றது. மேலும் இந்த 3 நிறுவனங்களுக்கும் அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.