---Advertisement---

ஆன்ட்டி செய்த தில்லாலங்கடி… 34 வயது நபரை ஏமாற்றி… போலீசில் புகார் அளித்த மாப்பிள்ளை..!

Published on: July 29, 2024
---Advertisement---

40 வயதான ஆன்ட்டி 32 வயது என்று கூறி 34 வயதான நபரை திருமணம் செய்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

குஜராத் மாநிலம், சர்க்கேஷ் என்ற பகுதியை சேர்ந்த 34 வயதான நபருக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது பெண் வீட்டார் அந்த பெண்ணிற்கு 32 வயது என்று கூறி திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். மேலும் அந்தப் பெண் 1991 ஆம் ஆண்டு மே மாதம் பிறந்ததாக கூறி சர்டிபிகேட்டை காட்டி இருக்கின்றார்கள்.

இதையடுத்து திருமணமாகி ஒரு வருடம் ஆகியும் குழந்தை இல்லாததால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து இருக்கிறார்கள். அப்போது இயற்கையான முறையில் அந்த பெண்ணிற்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இல்லை என்று தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் அந்தப் பெண்ணிற்கு 40 முதல் 42 வயது இருக்கும் என்று மருத்துவ அறிக்கையில் தகவல் வெளியானது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலியான ஆவணம் கொடுத்து திருமணம் செய்து கொடுத்ததாக கூறி மோசடி புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவரின் மனைவி, மாமனார் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்.

পড়তে ভুলবেন না