ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகின்றன. எந்தெந்த நாட்களில் வங்கிகள் செயல்படாது என்பது குறித்து இதில் நாம் தெரிந்து கொள்வோம்.
இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி வெளியிடவும். அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்துக்கான வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கின்றது. அதன்படி ஆகஸ்ட் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். பொது விடுமுறை நாட்களிலும் வங்கிகள் மூடப்படும்.
அதன்படி
ஆகஸ்ட் 3- கேர் பூஜை (அகர்தலாவில் வங்கிகளுக்கு விடுமுறை)
ஆகஸ்ட் 4- ஞாயிறு விடுமுறை
ஆகஸ்ட் 8- டெண்டாங் லோ ரம் பாத் (சிக்கிம் மாநிலம் காங்டாக்கில் வங்கிகளுக்கு விடுமுறை)
ஆகஸ்ட் 10 – இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை
ஆகஸ்ட் 11- ஞாயிறு விடுமுறை
ஆகஸ்ட் 13- தேசபக்தர் தினம் (இம்பாலில் வங்கிகளுக்கு விடுமுறை)
ஆகஸ்ட் 15- சுதந்த தினம்
ஆகஸ்ட் 18- ஞாயிறு விடுமுறை
ஆகஸ்ட் 19- ரக்சா பந்தன் (திரிபுரா, குஜராத், ஒடிசா, உத்தரகாண்ட், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் இமாச்சல பிரதேசம்)
ஆகஸ்ட் 20- ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி (கொச்சியில் வங்கிகளுக்கு விடுமுறை)
ஆகஸ்ட் 24- நான்காவது சனிக்கிழமை விடுமுறை
ஆகஸ்ட் 25- ஞாயிறு விடுமுறை
ஆகஸ்ட் 26- கிருஷ்ண ஜெயந்தி (குஜராத், ஒடிசா, சண்டிகர், தமிழ்நாடு, உத்தரகாண்ட், சிக்கிம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், ஜம்மு, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேகாலயா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஸ்ரீநகர்)
விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப முன்கூட்டியே மக்கள் திட்டமிட்டு கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.