முதல்வராக பதவியேற்றார் அதிஷி… பதவியேற்ப்புக்கு பின் கெஜ்ரிவால் காலில் விழுந்து ஆசீர்வாதம்…!

முதல்வராக பதவியேற்றார் அதிஷி… பதவியேற்ப்புக்கு பின் கெஜ்ரிவால் காலில் விழுந்து ஆசீர்வாதம்…!

இன்று டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பதவி ஏற்ற பிறகு கெஜ்ரிவால் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியிருக்கின்றார்.

டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான முறைகேடு வழக்கில் கடந்த 155 நாளாக திகார் ஜெயிலில் இருந்து வந்தார் அரவிந்த் கெஜ்ரிவால். இவர் கடந்த வாரம் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

புதிய முதல்வராக கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த அதிஷியை முதல்வராக தேர்வு செய்யப்படுவதாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். மேலும் அன்று மாலை அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து துணைநிலை கவர்னரை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு அமைச்சர் அதிஷி உரிமை கோரினார்.

இந்நிலையில் டெல்லி முதல்வராக அதிஷி இன்று மாலை பதவி ஏற்பார் எனவும் அவரது தலைமையில் புதிய அமைச்சரவையும் இன்று பதவி ஏற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த பதவியேற்பு விழா மாலை 4.30 மணிக்கு ராஜ் நிவாஸில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதன் படி இன்று மாலை டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பதவி ஏற்று கொண்டார்

அதிஷிக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வி கே சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் 5 அமைச்சர்கள் அதிஷியுடன் பதவி ஏற்று கொண்டனர். பதவியேற்ற பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் காலில் விழுந்து அதிசி ஆசிர்வாதம் வாங்கினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வருகின்றது.