Latest News
டெல்லி முதல்வராக இன்று பதவி ஏற்கிறார் அதிஷி… இன்று மாலை 4.30 மணிக்கு… வெளியான தகவல்..!
டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி இன்று மாலை 4.30 மணிக்கு பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான முறைகேடு வழக்கில் கடந்த 155 நாளாக திகார் ஜெயிலில் இருந்து வந்தார் அரவிந்த் கெஜ்ரிவால். இவர் கடந்த வாரம் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
புதிய முதல்வராக கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த அதிஷியை முதல்வராக தேர்வு செய்யப்படுவதாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். மேலும் அன்று மாலை அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து துணைநிலை கவர்னரை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு அமைச்சர் அதிஷி உரிமை கோரினார்.
இந்நிலையில் டெல்லி முதல்வராக அதிஷி இன்று மாலை பதவி ஏற்பார் எனவும் அவரது தலைமையில் புதிய அமைச்சரவையும் இன்று பதவி ஏற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பதவியேற்பு விழா மாலை 4.30 மணிக்கு ராஜ் நிவாஸில் நடைபெறுகிறது. முதல்வராக பதவியேற்க உள்ள அதிஷி டெல்லியின் இளைய முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பேனர்ஜியை தொடர்ந்து நாட்டின் இரண்டாவது பெண் முதல்வர் அதிஷி ஆவார். இதற்கிடையே குடியரசுத் தலைவர் முர்மு, அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு அதிஷி டெல்லி மாநில முதல்வராக அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்திருக்கின்றார்.