national
மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்… பொது மேடையிலே தேம்பி அழுத அமைச்சர் அதிஷி…!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் துணை முதல் மந்திரி பதவியை மணீஷ் சிசோடியா இழந்தார். ஊழல் விவகாரத்தில் அவரை சிபிசிஐடி, அமலாக்கத்துறையினரும் கைது செய்து சிறையில் அடைத்திருந்தார்கள். இந்த வழக்கில் ஜாமின் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பி ஆர் கவாய், கே.வி விஸ்வநாதன் ஆகியோர் ஜாமீன் வழங்கினார்கள். மேலும் அவர் வெளிநாடு செல்வதை தவிர்க்கும் நோக்கில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும் படி தெரிவித்திருந்தார்கள். ஜாமீன் காலத்தில் சாட்சியங்களை கலைக்கும் செயலில் மணீஷ் சிசோடியா ஈடுபடக் கூடாது என்றும் தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில் டெல்லி தலைநகரில் நடைபெற்ற விழாவில் டெல்லி அமைச்சர் அதிஷி கலந்து கொண்டார். அப்போது பொய்யான வழக்கில் மணீஷ் சிசோடியா சிறைக்கு சென்றார். தற்போது ஜாமினில் அவர் வெளியில் வந்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று உண்மை வென்றிருக்கின்றது, கல்வி வென்றது, குழந்தைகள் வென்றுள்ளனர் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது என்று கூறிய போது அமைச்சர் அதிஷி மேடையில் தேம்பி தேம்பி அழுததை பார்த்த பலரும் உணர்ச்சி வசப்பட்டனர். கட்சியின் தொண்டர்கள், மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கியதை இனிப்பு வழங்கி கொண்டாடியிருக்கிறார்கள். இந்த வழக்கில் சுமார் 17 மாதம் கழித்து சிசோடியாவுக்கு ஜாமின் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.