Latest News
பாத்ரூமில் ரகசிய கேமரா… ஷாக்கான இளம்பெண்… வீட்டின் உரிமையாளர் அதிரடி கைது…!
படுக்கையறை மற்றும் குளியலறையில் கேமராக்களை ரகசியமாக பொருத்திய வீட்டு உரிமையாளரின் மகன் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.
டெல்லி ஷகர்பூர் பகுதியில் பெண் ஒருவர் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து யூபிஎஸ் தேர்வுக்கு தயாராகி வருகின்றார். அவரின் படுக்கையறை மற்றும் குளியல் அறையில் கேமராக்கள் பொருத்தி இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. குற்றம் சாட்டப்பட்ட கரண் அந்த பெண் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரின் மகன் என்று கூறப்படுகின்றது.
தான் வசித்து வந்த வீட்டு சாதனங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராக்களை அந்த பெண் கண்டுபிடித்து இருக்கின்றார். அதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்து இருக்கின்றார். தகவரின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்த காவல்துறையினர் வீட்டு உரிமையாளர் மகன் கரணை கைது செய்திருக்கிறார்கள்.
மேலும் யுபிஎஸ்சி தேர்வு தயாராகி வரும் பெண் தனது whatsapp கணக்கில் வழக்கத்திற்கு மாறாக இருந்த செயல்பாட்டை கண்டு சந்தேகமடைந்தார். இதை தொடர்ந்து தன் வீட்டில் இருந்த கனெக்ட் சாதனங்களை சரிபார்த்திருக்கின்றார். அப்போது அறியப்படாத லேப்டாப்பில் இருந்து அவளது கணக்கு பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. அவரின் குடியிருப்பில் உள்ள அனைத்து பொருட்களிலும் தேடி இருக்கின்றார்.
குளியலறையின் பல்பு ஹோல்ட்டருக்குள் ஸ்பை கேமரா உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். சோதனையின் போது அவரது படுக்கையறையின் பல்பு ஹோல்டரிலும் கேமரா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் மூன்று மாதங்களுக்கு முன்பு அந்த பெண் உத்தர பிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றிருந்தபோது கரண் கேமராக்களை பொருத்தி இருந்ததை ஒப்புக்கொண்டார். மேலும் கரண் வசம் இருந்த ஒரு ஸ்பை கேமரா மற்றும் அதில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் அனைத்தையும் போலீசார் கைப்பற்றினார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.