Connect with us

கோவிலில் திருடிய சிலையை மன்னிப்பு கடிதத்துடன் ஒப்படைத்த திருடன்… திருந்தியதற்கு என்ன காரணம்..?

Latest News

கோவிலில் திருடிய சிலையை மன்னிப்பு கடிதத்துடன் ஒப்படைத்த திருடன்… திருந்தியதற்கு என்ன காரணம்..?

கோவிலில் திருடிய சாமி சிலைகளை திருடன் ஒப்படைத்தது மட்டுமில்லாமல் மன்னிப்பு கடிதத்தையும் வழங்கி இருக்கின்றான்.

உத்திரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இருந்து சிலைகளை திருடிய திருடன் கடந்த செவ்வாய்க்கிழமை சிலைகள் அனைத்தையும் திருப்பிக் கொடுத்துள்ளார். மேலும் சிலையுடன் மன்னிப்பு கடிதத்தையும் விட்டுச் சென்றிருக்கின்றார். இதில் கோவிலில் நடந்த திருட்டு சம்பவத்தால் தனக்கு நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து பேசி இருக்கின்றார்.

முறையான சடங்குகளுடன் கோவிலில் சிலை மீண்டும் நிறுவப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய மகத் ஜெயராம் தாஸ் திருடன் சிலைகளை ஆசிரமத்தின் வாயிலில் சணல் சாக்கில் வைத்து விட்டு சென்றிருக்கின்றான். இந்த ஆசிரமத்தில் கட்டப்பட்ட கோவிலின் கருவறையில் சுமார் 100 ஆண்டுகளுக்கு பழமையான ராதாகிருஷ்ணனின் அஷ்டதாது சிலை நிறுவப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இந்த சாமி சிலைகளை மர்ம நபர் திருடி சென்று விட்டார்.

கோவில் நிர்வாகி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த  மர்ம நபரை தேடி வந்தனர். சிலை திருட்டு போனதால் கோவில் நிர்வாகி மகத் ஜெயராம் தாஸ் சாப்பிடாமல் மிகுந்த கவலையில் இருந்தார். ஆசிரமத்தில் இருந்து மற்ற சீடர்களும் மிகுந்த சோகத்தில் இருந்தார்கள். இந்த சூழலில் திருட்டு நடைபெற்ற மறுநாளே கோவிலுக்கு அருகே ஒரு சாக்கு மூட்டை இருந்தது.

அப்பகுதியினர் அது என்னவாக இருக்கும் என்று பிரித்துப் பார்த்தார்கள். அந்த மூட்டைக்குள் கோவிலில் திருடப்பட்ட சிலை இருப்பதை கண்டு வியந்தனர். மேலும் அந்த மூட்டையில் ஹிந்தியில் எழுதப்பட்ட ஒரு கடிதமும் கிடைக்கப்பெற்றது. அந்த கடிதத்தில் எழுதப்பட்ட வாசகங்களை அங்கிருந்த நபர்கள் வாசித்த போது அதிர்ச்சி அடைந்தார்கள். ‘நான் பாவம் செய்துவிட்டேன்.

கிருஷ்ணர் ராதை சிலைகளை திருடினேன். சிலை திருடிய நாளில் தொடங்கிய கெட்ட கனவுகளால் மிகுந்த அவதி அடைந்து வருகின்றேன். என்னால் தூங்கவோ சாப்பிடவோ முடியவில்லை. பணத்துக்காக திருடியதால் என் மகனும் மனைவியும் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள். நான் சிலையை விற்கும் நோக்கத்தில் அதை கொள்ளையடித்தேன்.

என் தவறுக்கு மன்னிப்பு கேட்டு சிலையை மீண்டும் விட்டு செல்கின்றேன். என் தவறை மன்னித்து சிலையை மீண்டும் கோவிலில் வைக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். என் குழந்தைகளை மன்னித்து சாமி சிலைகளை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று எழுதப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சிலை மீண்டும் கோவிலுக்குள் கொண்டுவரப்பட்டு பூஜைகள் செய்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.

More in Latest News

To Top