Connect with us

அடகொடுமையே… குழந்தைகள் போட்ட ஓணம் கோலம்… அப்பார்ட்மெண்ட் பெண் செய்த அட்டூழியம்… வைரல் வீடியோ…!

Latest News

அடகொடுமையே… குழந்தைகள் போட்ட ஓணம் கோலம்… அப்பார்ட்மெண்ட் பெண் செய்த அட்டூழியம்… வைரல் வீடியோ…!

அப்பார்ட்மெண்ட் குடியிருப்பில் குழந்தைகள் சேர்ந்து ஓணம் பண்டிகைக்கு கோலம் போட்டு இருக்கிறார்கள். அதை ஒரு பெண் காலால் அழித்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக அப்பார்ட்மெண்ட் வீட்டில் குடியிருப்பது சில சமயங்களில் உதவியாகவும் சில சமயங்களில் உபத்திரமாகவும் இருக்கும் .அப்படி ஒரு சம்பவம் தான் பெங்களூருவில் அரங்கேறி இருக்கின்றது. கேரளாவில் மிகப் பிரபலமாக கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். தமிழகம் உட்பட தென்னிந்திய மாநிலங்களிலும் சமீப காலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சம்பீஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தானிசன்ட்ரா ஹெக்டே நகரில் மோனார்க் செரினிட்டி அபார்ட்மெண்ட் ஒன்று உள்ளது. இங்கு வசிக்கும் குடும்பங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக அப்பார்ட்மெண்டில் இருக்கும் பொது தளத்தில் சிறுவர் சிறுமிகள் இணைந்து பூகோலத்தை போட்டிருக்கிறார்கள்.

அந்தக் கோலத்தை அப்பார்ட்மெண்ட் குடியிருப்பில் வசித்து வந்த நடுத்தர வயது பெண் ஒருவர் காலால் அளித்திருக்கின்றார். கோலம் போடுவோர் அவரவர் வீட்டில் போட்டுக்கொள்ள வேண்டும் பொது இடத்தில் ஏன் போட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டே அந்தக் கோலத்தை அவர் அளிக்கும் வீடியோவானது இணையதள பக்கத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

More in Latest News

To Top