national
நோ பார்க்கிங் விவகாரம்… தன் ஆட்டோவிற்கு தீ வைத்துக் கொளுத்திய ஓட்டுனர்… வைரலாகும் வீடியோ…!
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் நகரில் நோ பார்க்கில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவிற்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்திருக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் உடன் அந்த ஆட்டோ ஓட்டுனர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றார். ஒரு கட்டத்தில் மிகுந்த விரக்தி அடைந்த ஆட்டோ ஓட்டுனர் தனது ஆட்டோவை தீ வைத்து எரித்தார்.
ஆட்டோ எரியும் வீடியோ இணையத்தில் வெளியாகிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆட்டோவிற்கு தீ வைத்ததற்காக ஆட்டோ ஓட்டுனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தார்கள். மேலும் தன்னை பழி வாங்குவதற்காக தனது ஆட்டோவை போலீசார் தீ வைத்து எரித்தனர் என்று ஆட்டோ ஓட்டுனர் குற்றம் சாட்டியிருக்கின்றார். இது தொடர்பான வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
उत्तर प्रदेश : जिला बुलंदशहर में दुकान के बाहर खड़े टेंपो का पुलिस ने चालान काट दिया। गुस्साए युवक ने अपने टेंपो में आग लगा दी।
पुलिस के अनुसार– टेंपो सड़क पर खड़ा होने से ट्रैफिक बाधित हो रहा था। pic.twitter.com/3F5VHkc8cC
— Sachin Gupta (@SachinGuptaUP) August 20, 2024